பாராளுமன்றத்தில் அரசாங்க தரப்பில் பிரதி, உதவி கொரடாக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த நியமனங்களை நேற்று வழங்கி வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம், ஜெயந்த கெட்டேகொட ஆகியோர் அரசாங்க தரப்பு பிரதி கொரடாக்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அதேநேரம், கோகிலா குணவர்த்தன, மதுரா வித்தானகே ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச தரப்பு உதவி கொரடாக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் அலுவலகத்தில் இது தொடர்பான நிகழ்வு நேற்று நடந்தது