தற்போதைய பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் இன்று நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படுவதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.
புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் மூன்றாம் தேதி காலை 10:30க்கு கூட உள்ளது.
இன்றைய தினம் ஜனாதிபதி உத்தி பூர்வமாக கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து, சிம்மாசன உரையாற்றுவார்.
அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு இணங்க, புதிய ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார் என தெரிய வருகிறது