பதுளை, ஹிந்தகொட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் ஒருவர் மேல் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
நேற்று (27) இரவு 11.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை பயமுறுத்தும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
என்றாலும் இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.