Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகுடும்ப சுகாதார அலுவலகம் பெற்றோர்களிடம் விடுக்கும் வேண்டுகோள்...

குடும்ப சுகாதார அலுவலகம் பெற்றோர்களிடம் விடுக்கும் வேண்டுகோள்…

கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு குடும்ப சுகாதார அலுவலகம் பெற்றோர்களிடம் விசேட கோரிக்கையை விடுத்துள்ளது.

நாட்டில் உள்ள சகல பாடசாலைகளும், மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையினால் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ளவதற்கு இடமளிக்காமல்ல வீட்டிலேயே பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிள்ளைகளுக்குக் காய்ச்சல், இருமல், தடுமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசேடமாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளின் கைகளை சவர்க்காரமிட்டுக் கழுவ வேண்டும். வீட்டில் இருந்து வெளியே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவசம் அணிய வேண்டும் என பெற்றோர் பிள்ளைகளுக்குக் கூற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments