இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளான இன்று இலங்கை அணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற
இந்த போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 508 ஓட்டங்களை இலங்கை அணி இலக்காக நிர்ணயித்தது.
அதில் பாகிஸ்தான் 261 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பாக
பாபர் அசாம் 81ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இமாமுல் ஹக் 49 ஓட்டங்கள்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக பிரபாத் ஜயசூரிய 5 விக்கட்டுகளையும்,
ரமேஷ் மென்டிஸ் 4 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
முன்னதாக முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி 378 ஓட்டங்களை எடுத்தது.
பாகிஸ்தான் அணி 231 ஓட்டங்கள்.
இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 360 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
பாகிஸ்தான அணி 508 ஓட்டங்களை இலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடி 261 ஓட்டங்களை எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தனஞ்சய டி சில்வா தெரிவு செய்யப்பட்டார்.
போட்டி தொடரின் நாயகனாக பிரபாத் மெண்டிஸ் தெரிவானார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் முடிவுக்கு வந்தது.