ஜுலை 13ஆம் திகதி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தனிஸ் அலி என்பவரை ஆகஸ்ட் எட்டாம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துபாய் செல்ல முயற்சித்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தினுள் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் நேற்று கைதுசெய்யப்பட்டார்.
கடந்த 13ஆம் திகதி சில தரப்பினர் இலங்கை ரூபவாஹினி கூடடுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்து ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.