உத்தியோபூர்வ வாசஸ்தலமான ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சி.ஐ.டியினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் போராட்டக்காரர் என்ற பெயரில் புகுந்த போது ஜனாதிபதி மாளிகையின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதே நேரம், ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுத்த பணத்தொகையை எண்ணி கணக்கிடுவதிலும் இவர் மும்முரமாக செயல்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
வீடியோ ஆதாரங்களை வைத்து சிஐடி போலீசார் இவரை கைது செய்துள்ளனர். இவர் கொழும்பு 14 சேர்ந்தவர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.