மக்களின் சக்தியின் இறுதி போராட்டம் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும்.
இதில் நாடு தழுவிய அளவில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று பாராளுமன்றத்தில் கூறினார்.
அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இறுதிப் போராட்டம் ஒன்பதாம்திகதி நடைபெறும். இது இந்த நாட்டில் உள்ள ஊழல்வாதிகளை துரத்துவதற்கான இறுதிப் போராட்டமாக இருக்கும்.
இந்த நாட்டில் உள்ள முப்படையினர் போலீசாருக்கு நான் ஒரு அன்பான வேண்டுகோளை விடுக்கிறேன். மக்களுக்காக போராடுகின்ற இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தாதீர்கள்.
இந்த நாட்டின் இளம் சந்ததிகள் அவர்கள். அவர்கள் உங்கள் பிள்ளைகள், உறவினர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். என சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்..