Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇலங்கையில் அவசரகால நிலையை நீடிப்பதற்கு பாராளுமன்றம் அங்கீகாரம்: 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கையில் அவசரகால நிலையை நீடிப்பதற்கு பாராளுமன்றம் அங்கீகாரம்: 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசர காலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பிரேர ணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் கிடைத்தன.

இதன்படி அவசரதற்கான சட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஒன்பது பேர் கொண்ட சுயாதீன குழு ஆகியன பிரேரணையை எதிர்த்து வாக்களித்தன.

பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 17ஆம் தேதி அவசர கால நிலை பிரகடன படுத்தப்பட்டது.

இலங்கையின் அரசியல் அமைப்பின்படி, அவசரகால நிலை நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டால், 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தினுடைய அங்கீகாரத்தை பெற வேண்டும்.

இதன்படி, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு 57 மேல் அதிக வாக்குகளால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. பி ரே ர ணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடிய பொழுது, அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமானது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, இன்று பிற்பகல் 4:30 வரை விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments