Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுவாழைச்சேனையில் இரு வீடுகள் உடைக்கப்பட்டு பணம், நகைகள் கொள்ளை

வாழைச்சேனையில் இரு வீடுகள் உடைக்கப்பட்டு பணம், நகைகள் கொள்ளை

மட்டு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள இரு வீடுகள் உடைக்கப்பட்டு ஒரு இலட்சத்து 74 ஆயிரம் ரூபா பணம்,6 பவுண் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (26)  அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். 

ஓட்டமாவடி 2ம் பிரிவு சந்தை வீதியிலுள்ள வீடு ஒன்றில் வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் நித்திரையில் இருந்துள்ள போது அதிகாலை 2.45 மணியளவில் வீட்டின் யன்னலை உடைத்து கொண்டு உள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டின் அலுமாரியில் இருந்த 6 பவுண் தங்கநகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் .

அதேவேளை,இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்திலுள்ள குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றில் அதிகாலை 3.30 மணிக்கு யன்னலை உடைத்து உள்நுழைந்து அங்கிருந்த ஒரு இலட்சத்து 74 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

இது தொடர்பாக தடயவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்  

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments