ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன நாளை தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார்.
நாளை காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடும் போது சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்த்தன முன்னிலையில் இவர் சத்திய பிரமாணம் செய்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து, அந்த வெற்றிடத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி இவரை நியமித்து உள்ளது.
இவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்படலாமென பாராளுமன்ற வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.
தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் பொழுது, அதில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில்,அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.