Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமுச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு அமைச்சு அவசர அறிவிப்பு: பதிவு செய்ய 31 வரை அவகாசம்

முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு அமைச்சு அவசர அறிவிப்பு: பதிவு செய்ய 31 வரை அவகாசம்

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் சகல எரிபொருள் நிரப்பு நிலை உரிமையாளர்களும் QR முறைமையை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தின்போது QR வசதிகளுடன் கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கே முன்னுரிமையளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் QR முறைமையின் கீழ் மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதலில் வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்க முறைமை அமுலில் இருக்காது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்பிறப்பாக்கி வீட்டு பயிர்ச்செய்கை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை பதிவு செய்வதற்கான வசதி இந்த வாரத்துக்குள் வழங்கப்படும். தங்களுடைய எரிபொருள் தேவையை பிரதேச செயல்களூடாக பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டிகளுக்கு பிரத்தியேக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்,முச்சக் கர வண்டி உரிமையாளர்கள் தங்களுடைய முச்சக்கர வண்டிகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படும்போது, எந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்புவதற்கு தங்களுக்கு வசதியாக இருக்கும் என்பதையும் போலீஸில் நிலைய ங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

எதிர்வரும் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்த பதிவுகளை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் செய்ய வேண்டும். முதலாம் தேதியில் இருந்து பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச பேருந்து நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பேருந்துகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் போக்குவரத்து அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments