நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதனால், முகக் கவசங்களை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு வலியுறுத்தி உள்ளது.
தினமும் கோவிட் -19 பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், கட்டாயம் முகக் கவசங்களை அணிவது அவசியம் என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளநாயகம் அசேல குணரட்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னைய சுற்று நிருபம் மாற்றி அமைக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
பொது வெளிகளில் ஒன்று கூடுதல், பொது இடங்களில் பயணம் செய்தல் மற்றும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் போதும் கட்டாயம் முக கவசங்களை அணியுமாறு அவர் கேட்டுள்ளார்.