தமிழ்நாடு அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட மற்றொரு தொகுதி அத்தியாவசிய பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்களை, அமைச்சர்கள் கெஹலிய ரம்புக்வெல்ல, அலி சப்ரி ஆகியோரிடம் இந்திய உயஸ்தானிகர் இன்று காலை உத்தியோபூர்வமாக கையளித்தார்.
40,000 மெ. தொ அரிசி, 500 மெ. தொ பால்மா, 100 மெ. தொன்களுக்கும் அதிகமான மருந்து பொருட்கள் ஆகியன இந்த தொகுதியில் அடங்குகின்றன.