கொழும்பு காலிமுகத் திடலில் உள்ள பண்டாரநாயக்க உருவச் சிலை அருகில் நின்று கொண்டிருந்த நால்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்காவின் சிலையிலிருந்து 50 மீட்டர் விட்டம் தூரத்திற்குள் எவரும் ஒன்று கூடுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த நீதிமன்ற உத்தரவை மீறியதன் குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நால் வரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்துள்ளார்கள்.
இந்த சிலை அமைந்துள்ள பிரதேசத்திலேயே போராட்டக்காரர்கள் தங்கி இருந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.