பாராளுமன்ற ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் சபை அமர்வின் போது சமூகம் அளிக்க வேண்டும் என ஜனாதிபதி அமைச்சரவையில் அறிவுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினை தொடர்பாக எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு அமைச்சர்கள் உரிய பதிலை அவ்வப்போது வழங்க வேண்டும்.
அதே நேரம், அரசாங்க நிர்வாகத்தை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புணர்வோடு நடக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன சற்று நேரத்துக்கு முன்னர் கூறினார்.