Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுCovid-19 :தாக்கம் அதிகரிப்பு : சுகாதார வழிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற கோரிக்கை

Covid-19 :தாக்கம் அதிகரிப்பு : சுகாதார வழிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற கோரிக்கை

19 – நாட்டில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதனால் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.

நாளாந்தம் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகின்றது. உயிரிழப்புக்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் பரவும் வீதம் அதிகமாக இருக்கிறது என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி கூறுகிறார்.

மேல் மாகாணத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் அதிகரிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே மக்கள் சமூக இடைவெளியை பேணுதல், அனாவசியமான பயணங்களை தவிர்த்தல், ஒன்று கூடுதல்களை தவிர்த்தல் ஆகிய முக்கிய சுகாதார வழிகாட்டுதல்களை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இதே வேளை, முகக் கவசங்களை ஒவ்வொருவரும் தங்களது தினப்பணியுடன் கட்டாயம் ஆக்கிக் கொள்ள வேண்டும். முகக் கவசங்களை அணிவதன் மூலம் ஏனைய சுவாசம் நோய்களிலும் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் டாக்டர் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments