மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து 8 கால் பவுண் நிறை கொண்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் 3 ஆண்கள் உட்பட 5 பேரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு ஆண்கள் ஒரு பெண்ணிடம் ஹரோயின் போதை பொருள் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
ஏறாவூர் ஆர்.சி. வீதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் சம்பவதினமான கடந்த 11 ம் திகதி காலை 11.00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று அன்று இரவு 9.15 மணிக்கு வீடு திரும்பிய போது வீட்டின் பின்பகுதி கதவை உடைத்து அங்கு வீட்டின் அறையில் அலுமாரியில் இருந்த 8 கால் பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது
இது தொடர்பாக பொலிசாரிடம் முறைபாடு தெரிவித்ததையடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்பெக்டர் வை.விஜயராஜ் தலைமையிலான பொலிசார் மேற்கொண்டுவந்து விசாரணையில் இன்று திங்கட்கிழமை (25) மிச்சு நகர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20,45 வயதுடைய பெண்கள் இருவரும் ஆண்கள் மூவர்; உட்பட 5 பேரை கைது செய்தனர்
இதன் போது கைது செய்யப்பட்ட ஒரு பெண் 2 ஆண்களிடம் இருந்து ஹரோயின் போதை பொருளை மீட்டதுடன் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களையும் அங்கிருந்து மீட்டு ள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 3அரை பவுண் தங்க சங்கிலியை மட்டக்களப்பு நகர் நகைகடை ஒன்றில் அடகு வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டதையடுத்து கொள்ளையிடப்பட்ட 8 கால் பவுண் தங்கநகைகளை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.