பொரளை – காசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேட்டார் சைக்கிளில் பெற்றோல் திருடப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் மேட்டார் சைக்கிள் உரிமையாளரை மற்றுமொரு நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொரளை காசல் வீதியில் வசித்துவந்த 40 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் நபர் 29 வயதுடைய, அதே பகுதியை சேர்ந்த ஒருவரென தெரியவந்துள்ளது.
பொரளை பொலிஸாரினால் அச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.