Monday, 5 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுதம்மிக்க பெரேராவின் ராஜினாமாவை ஏற்பதா? இல்லையா? பசில் தலைமையில் இன்று கூட்டம்

தம்மிக்க பெரேராவின் ராஜினாமாவை ஏற்பதா? இல்லையா? பசில் தலைமையில் இன்று கூட்டம்

முன்னாள் அமைச்சர் தமிக்க பெரேரா இன்று இராஜினாமா செய்வதா? இல்லையா? என்ற இறுதித் தீர்மானம் எடுக்கப்பட இருக்கிறது. பசில் ராஜபக்ஷவின் இடத்துக்கு நியமிக்கப்பட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான தம்மிக்க பெரேரா ராஜினாமா செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இவரது ராஜினாமா தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியில் அதிருப்தி நிலவியது. பசில் ராஜபக்ஷ உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் அவர் ராஜினாமா செய்வதை விரும்பவில்லை. இந்த நிலையில், பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்பட இருக்கின்றது.

இது தொடர்பாக இன்று கட்சி தலைமையகத்தில் விசேட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ உட்பட கட்சியின் முக்கிய பிரதானிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இறுதி முடிவு எடுக்க இருக்கின்றார்கள்.

தம்மிக்க பெரேரா ராஜினாமா செய்தால் அந்த வெற்றிடத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாகவும் இன்று இந்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட இருக்கின்றது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments