Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுதமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் இணைவது தொடர்பில் பேச்சு வார்த்தை...

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் இணைவது தொடர்பில் பேச்சு வார்த்தை…

மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

தேசிய அரசாங்கம் அல்லது சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று உருவானால், அதில் இணைந்து முழுமையாக செயல்படுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

தேசிய அரசாங்கத்தில் இணைவதாக இருந்தால் இரண்டு அமைச்சுப் பொறுப்புகள் வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் தெரிய வருகிறது.
தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டது.

அதே நேரம், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் கடந்த 20 ஆம் தேதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இந்த முன்னணியை சேர்ந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவே வாக்களித்தார்கள் என்பது முக்கியமான விடயம்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments