ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார சீர்திருத்தங்களை துரிதமாக மேற்கொள்ளாவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்துவிடுமென பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் பலருக்கு சரியான புரிதல் இல்லை.
நமது நிலைமை எவ்வளவு ஆபத்தானது என்று இலங்கையில் உள்ள பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். பொருளாதார சீர்திருத்தங்களை அவசரமாக செய்ய வேண்டும். இலங்கை பொருளாதார நெருக்கடி மோசமடையும்.
அவரது அமைச்சரவையில் இருவரைத் தவிர மற்ற அனைவரும் பல தசாப்தங்களாக எந்த சீர்திருத்தத்தையும் மறுத்துவிட்டனர். சித்தாந்தம் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு இடம் கொடுக்குமா? என அவர் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.