புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக கடந்த 20ஆம் தேதி பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ஐக்கியமக்கள் சக்தியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் என ஜேவிபி தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இதனை நேரடியாக கண்டறிய முடிய விட்டாலும், ரணில் விக்ரமசிங்க பெற்றுக் கொண்ட 1 34 வாக்குகளையும் சரியாக கூறு போட்டு பார்த்தால் இந்த உண்மை புரியும்.
இறுதி நேரத்தில் பணப்பரிமாற்றமும் நடந்திருக்கிறது. பணங்கள் கைமாற்ற ப்பட்ட பின், ரகசியமாக ரணிலுக்கு வாக்களித்துவிட்டு இப்பொழுது மீண்டும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் மறைந்திருக்கின்றார்கள்.
எதிர்வரும் 27ஆம் தேதி பாராளுமன்றம் கூடுகிறது. அன்றைய தினம் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அது ரகசிய வாக்கெடுப்பாக இருக்காது. அன்றைய தினம் உண்மை நிலையை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என அநுர குமார திசாநாயக்க கூறினார்.