சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படாமல் நகரில் அகிம்சை வழியில் போராட்டங்களை தொடர அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் வெளிநாட்டு ராஜதந்திரர்களுக்கு ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
கொழும்பில் விஹாரமஹாதேவி பூங்காவில் திறந்தவௌி அரங்கு, புதிய நகர மண்டபம், ஹைட் பார்க் மற்றும் கெம்பல் பார்க் போன்ற கொழும்பிலுள்ள வசதிகள் அனைத்தும் வன்முறையற்ற போராட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ராஜதந்திரர்களிடம் தெளிவுபடுத்தி உள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
GotaGoGama போராட்டத்தளம் தொடர்பில் சமூக ஊடக அறிக்கைகளில் வௌியாகும் தகவல்கள் பொய்யானவை எனவும் பாதுகாப்பு படையினரால் அகற்றப்படவில்லை எனவும் இராஜதந்திரிகளுக்கு இதன்போது தௌிவுபடுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.