https://twitter.com/tariqahmadbt?
பிரிட்டிஷ் அமைச்சர் தாரிக் அஹமட்டுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி மூலம் உரையாடி உள்ளார். இதன் போது இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி பாதுகாப்பு நிலமை தொடர்பாக இருவரும் நீண்ட நேரம் உரையாடியதாக பிரிட்டிஷ் அமைச்சர் தனது twitter செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் தாரிக்,மனித உரிமைகள்,அமைதியான ஆர்ப்பாட்டம், ஊடக சுதந்திரம் உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எடுத்துக் கூறினார்.
இந்த சவால்களை எதிர்கொண்டு நாட்டை முன்னேற்றுவதற்கான பாதையில் இலங்கை செயல்படுமாக இருந்தால்,பிரிட்டன் இலங்கைக்கு உதவும் என்று பிரிட்டிஷ் அமைச்சர் தாரிக் தெரிவித்துள்ளார்.