இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இலங்கை அணியின் சிரேஷ்ட வீரமான ஆங்கிலோ மேத்தியோ இன்றுடன் நூறாவது டெஸ்ட் போட்டியில் தடம் பதிக்கிறார்.
பாகிஸ்தான் அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஆரம்பமான போது, அஞ்சலோ மெத்தியோவை கௌரவிக்கும் வகையில் சிறு வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கிரிக்கெட் வீரர்களின் உறவினர்கள், குடும்பத்தார் கலந்து கொண்டார்கள்.