தென் மாகாண சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற சகல பாடசாலைகளும் நாளையிலிருந்து ஐந்து தினங்களும் வழமை போன்று செயல்படும் என்று மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள சகல பாடசாலைகளும் நாளை ஆரம்பமாகின்றன. ஆனால்,மூன்று தினங்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு சமூகம் அளிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனைய இரண்டு தினங்களும் இணைய வழி மூலமாக கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.