Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeவெளிநாட்டுமோல்டா வங்கியிலுள்ளக டாபியின் மகனது சொத்துக்களை முடக்க தீர்ப்பு

மோல்டா வங்கியிலுள்ளக டாபியின் மகனது சொத்துக்களை முடக்க தீர்ப்பு

முஅம்மர் அல் கடாபியின் மகன் முதா ஸிம், மோல்ட்டா வங்கியில் வைப்பி லிட்டிருந்த நிதியை, லிபியாவுக்கு அனுப்புமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.இவர்,முன்னாள் ஜனாதிபதி கடாபியின் காலத்தில், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக இருந்தவர்.

இத்தீர்ப்பை ஆட் சேபித்து கடாபியின் மனைவி ஷாபியா பெகா ஷ் மேன்முறையீடு செய்துள்ளார்.இத் தீர்ப்பிலுள்ள குறைபாடுகளைச் சுட்டி க்காட்டியே,ஷாபியாபெகாஷ் மேன்முறையீடு செய்துள்ளார்.

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி 2012 இல் பதவி கவிழ்க்கப்பட்டபோது, அவரது மூத்த மகன் முதாஸிமும் கொ ல்லப்பட்டார்.இவர்,ஆபிரிக்க நாடான மோல்ட்டா வங்கியில் நூறுமில்லியன் டொலரை வைப்பிலிட்டிலிருந்தார்.

இந்த நிதியை,லிபியாவுக்கு அனுப்புமாறு மோல்டா உள்ளூர் நீதிமன்றம் கடந்த ஜூன்மாதம் தீர்ப்பளித்தது.இது,மோ ல்டாவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு நிதிகள் மற்றும் வைப்புக்கள் தொடர்பில் உத்தரவிடுவதற்கு உள்ளூர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை.கடாபியின் மகன் வைப்பிலிட்டுள்ள நிதிகள் யுத்த காலத்துக்கு உட்பட்டதல்ல என்பவையே ஆட்சேப னை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிய வர்த்தக நோக்குகளுக்காக பயன்பாட்டிலிருந்த முதாஸிமின் நிதி, கடந்த சில வருடங்களாக வங்கிப்பரி மாற்றங்களுக்கு உட்படாதிருந்ததை அடிப்படையாக வைத்தே,அவரது நிதியை லிபியாவில் வைப்பிலிட உத்தரவிடப்பட்டது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments