Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமுன்னாள் அமைச்சர் நிமல் மீதான ஊழல் குற்றச்சாட்டு : விசாரணைக்கு மூவர் குழு நியமனம்

முன்னாள் அமைச்சர் நிமல் மீதான ஊழல் குற்றச்சாட்டு : விசாரணைக்கு மூவர் குழு நியமனம்

முன்னாள் அமைச்சர் நிமல் ஸ்ரீ பால டி சில்வா மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மூவர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குஷாலா சரோஜினி வீரவர்த்தன தலைமையில் இந்த மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா அமைச்சராக இருந்த பொழுது, ஜப்பானிய நிறுவனம் ஒன்றிலிருந்து நிதி பெற்றுக் கொண்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டி இருந்தார்.

இது தொடர்பான விசாரணை முடியும் வரை தான் அமைச்சர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக முன்னைய ஆட்சியின் போது அறிவித்திருந்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இந்த ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments