Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபொத்துவிலில் எரிபொருளுக்காக காத்திருந்த சமுர்த்தி அதிகாரி உயிரிழப்பு

பொத்துவிலில் எரிபொருளுக்காக காத்திருந்த சமுர்த்தி அதிகாரி உயிரிழப்பு

அம்பாறை பொத்துவிலில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (23) காலை 11 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.

பொத்துவில் லகுகலையில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் 51 வயதுடைய திசாநாயக்கா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொத்துவில் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் பெற்றோலை பெறுவதற்காக சம்பவதினமான இன்று காலையில் இருந்து காத்திருந்த ஒருவர் திடீரென மயக்கமுற்று கீழே வீழ்ந்து மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஏற்கனவே இருதய சத்திர சிகிச்சை மேற்கொண்டவர் எனவும் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொத்துவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments