74 கோடி ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்களுடன் தமிழகத்திலிருந்து மூன்றாவது தொகுதி கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலில் 74 கோடி ரூபா பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்துகள் என பல பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரண்டு கப்பல்களில் தமிழகத்தில் இருந்து மனிதாபிமான உதவியாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2 கப்பல்கள் நாட்டுக்கு வந்திருந்தன.