லங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான அஞ்சலோ மெத்தியோ, நாளை நூறாவது டெஸ்ட் போட்டியில் தடம் பதிக்கிறார்.
பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகிறது.
காலியில் நாளை ஆரம்பமாகும் இந்த போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்தியோ தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அவர், “இது எனது நூறாவது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும், இன்னும் தொடர்ந்து விளையாடுவேன்.
கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. கிரிக்கெட்டில் பல வழிகளிலும் விளையாட்டை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு என்னால் முடிந்த அர்ப்பணிப்புகளை செய்கிறேன்.
என்னை விளையாட்டில் உற்சாகப்படுத்துவதற்கு நான் ஜிம்மி அண்ட் சனையே பின்பற்றுகிறேன்.” என்றார். காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரண்டாவது டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பதாக, அவரை பாராட்டும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை இதனை ஏற்பாடு செய்துள்ளது. கிரிக்கெட் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொள்வார்கள்.