Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமேல் குத்துமலை நீர்த்தேக்கத்தில் மாணவியின் சடலம் மீட்பு

மேல் குத்துமலை நீர்த்தேக்கத்தில் மாணவியின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்தேகத்திலிருந்து 22.07.2022 அன்று மாலை  பாடசாலை மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.

நீர்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் லிந்துலை பெயார்பீல்ட் (மிளகுசேனை) தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதுடைய முத்துரட்ணம் ஜீலோஜினி என்ற லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இன்று (22.07.2022) காலை தனியார் வகுப்புக்காக தலவாக்கலை நகரத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வந்ததாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இவர் இந்த வருடம் இடம்பெறவுள்ள க.பொ.த உயர் தர பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவி என பொலிஸாரால் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த மாணவியின் மரணம் தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நுவரெலியா நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments