Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுதாக்குதல்கள் நடத்திப் போராட்டத்தை தடுக்க முடியாது: ஜேவிபி செயலர் ரில்வின்

தாக்குதல்கள் நடத்திப் போராட்டத்தை தடுக்க முடியாது: ஜேவிபி செயலர் ரில்வின்

- ராஜபக்ஷக்களின் ஒப்பந்தத்தை ரணில் நிறைவேற்றுகிறார்

போராட்டக்காரர்கள் மீதான ரணில் விக்கிரமசிங்கவின் தாக்குதல் மக்களை பாதுகாப்பதற்கான அல்ல, ராஜபக்ஷக்களை காப்பாற்றுவதற்காகவே இப்படியான செயல்களை ஜனாதிபதி ரணில் செயல்படுத்துகிறார் என்று ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

சற்று நேரத்துக்கு முன்னர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார்.

ராஜபக்சஷக்கள் கொடுத்த ஒப்பந்தத்தை ரணில் இப்போது நிறைவேற்றுகிறார். மக்களை பாதுகாக்கும் நோக்கம் அவரிடம் இல்லை.

இப்படி தாக்குதல் நடத்தி பயமுறுத்தி போராட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது. இந்த தாக்குதல் மூலம், போராட்டம் முழு உத்தியோகம் பெற்று இருக்கிறது என்றும் ரில்வின் சில்வா கூறினார்.

எச்சரிக்கையாக சொல்கிறேன். கோட்டா படித்த பாடத்தை விட மிகவும் மோசமான பாடத்தை ரணில் கற்றுக் கொள்வார்.

போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நாம் செயல் படுவோம். அமைதி வழியில் போராட்டம் நடத்திய போராளிகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

கைதானவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என
ரில்வின் சில்வா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments