Monday, 5 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுதாக்குதலுக்கான பொறுப்பிலிருந்து ஜனாதிபதி தப்ப முடியாது : சர்வ கட்சி ஒன்றிணைவு கூட்டத்தில் -சஜித் (வலையொளி...

தாக்குதலுக்கான பொறுப்பிலிருந்து ஜனாதிபதி தப்ப முடியாது : சர்வ கட்சி ஒன்றிணைவு கூட்டத்தில் -சஜித் (வலையொளி இணைப்பு-)

ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் இந்நாட்டின் நிராயுதபாணியான மக்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதாகவும், இத்தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டவுடன் ஆரம்பிக்கப்பட்ட இத்தாக்குதல் அரசாங்கம் செல்ல முற்படும் பாதை எது என்பதை நன்கு உணர்த்துவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த தாக்குதலில் ஏராளமான நிராயுதபாணியான பொது மக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெண்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற “சர்வகட்சி ஒன்றிணைவு”என்ற தொனிப்பொருளிலில் இடம் பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இத்தாக்குதலுக்கான பொறுப்பிலிருந்து ஜனாதிபதி தப்ப முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இத்தாக்குதலுக்கு உத்தரவு பிறப்பித்தது யார்? திட்டமிட்டது யார்? தாக்குதலை நடத்தியது யார்? என்பன குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

டலஸ் அழகப்பெரும,எம்.சுமந்திரன்,ரவூப் ஹகீம்,மனோ கணேசன்,பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,ரஞ்சித் மத்தும பண்டார, வைத்தியர் ராஜித சேனாரத்ன,அனுர பிரியதர்ஷன யாப்பா, கபீர் ஹாசிம், சந்திம வீரக்கொடி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments