Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதி பதவியேற்று 24 மணி நேரத்தில் அடிப்படை உரிமைகளை மீறி உள்ளார்- கர்தினால் மெல்கம்...

ஜனாதிபதி பதவியேற்று 24 மணி நேரத்தில் அடிப்படை உரிமைகளை மீறி உள்ளார்- கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணி நேரத்துக்குள் ஜனாதிபதி அடிப்படை உரிமைகளை மீறி உள்ளார் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

அரசியலமைப்பை பாதுகாப்பதாகக் கூறித்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். ஆனால், பதவியேற்ற 24 மணித்தியாலங்களுக்குள் கருத்துத் தெரிவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்குமான அடிப்படை உரிமைகளை முற்றாக மீறியுள்ளார் என்றும் ஆண்டகை கூறினார்.

பொரளையில் உள்ள பேராயர் இல்லத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேறப் போவதாக தெரிவித்திருந்த போதிலும், இந்த தாக்குதல் காரணமாக எதிர்காலத்தில் ஏதேனும் தவறுகள் நடந்தால் அதற்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க நேரிடும் எனவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் பொலிஸ் மற்றும் இராணுவ பலத்தை பயன்படுத்தி அப்பாவி மக்கள் மீதான அடக்குமுறை மற்றும் அமைதியான போராட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பேராயர் தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments