Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு:வெள்ளவத்தையில் சம்பவம்

அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு:
வெள்ளவத்தையில் சம்பவம்

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டராக பணியாற்றி வந்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம், வெள்ளவத்தை-விவேகானந்தா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று காலை நடந்துள்ளது.

உயிரிழந்த நபர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த நபர் நான்காவது மாடி படிக்கட்டில் இருந்து முதல் மாடிக்கு விழுந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments