கொழும்பில், பிரதமரின் உத்தியோகபூர் வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த ‘நோ டீல் கம ‘ போராட்டக்காரர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றார்கள்.
இன்று பிற்பகல் திடீரென அறிவித்தவர்கள், கூடாரங்களை அகற்றிக் கொண்டு தாங்களாகவே வெளியேறி இருக்கின்றார்கள்.
அங்கிருந்து அவர்கள் புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் சில கருத்துக்களை கூறினார்கள்.
” இங்கிருந்து நாம் அச்சத்தில் வெளியேறவில்லை. புதிய ஜனாதிபதி இப்பொழுது பதவியேற்று இருக்கிறார். அவருக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கால அவகாசம் கொடுத்து பார்ப்பதற்காகவே இங்கிருந்து தற்காலிகமாக வெளியேறுகிறோம் ” என கருத்து கூறினார்கள்.
“மக்கள் நலம் சார்ந்து ஜனாதிபதி செயல்படாவிட்டால் மீண்டும் இதே இடத்தில் எங்கள் போராட்டத்தை ஆரம்பிப்போம் “. என்றும் எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்கள்.
“எங்கள் போராட்டத்தில் நாங்கள் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறோம்.
மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலக்கி இருக்கிறோம். இருந்தாலும் இவ்விடத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறுகிறோம் “என ஊடகவியலாளரிடம் அவர்கள் தெரிவித்தார்கள்.