(கனகராசா சரவணன்)
அம்பாறை தெஹியத்த கண்டி பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வைத்தியர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (20) வைத்தியசாலைக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம், அரச மருத்துவ அபிவிருத்தி சங்கம், அரச இலங்கை தாதியர் சங்கம், தாதியர் இயல் தொழில் நுட்ப சங்கம், துணை மருத்துவ அதிகாரிகள் சங்கம், வைத்திய நிபுணர்கள் சங்கம் ஒன்றிணைந்து சுகாதார சேவையாளர்களுக்கு எதிராக தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுகாதாத்துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், செ பொலிசார் தாக்குதலை மேற்கொண்டவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பொலிசார் தமது கடமையை சரியாக செய்யவேண்டும் என சுலோகங்கள் ஏந்தியவாறு கோசம் எழுப்பி சுமார் அரை மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டபின்னர் அங்கிருந்து விலகிச் சென்றனர்