Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமன்னார் கடற்பரப்பில் எல்லை மீறிய ஆறு தமிழக மீனவர்கள் கைது

மன்னார் கடற்பரப்பில் எல்லை மீறிய ஆறு தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டு இருந்த ஆறு தமிழக மீனவர்களை இலங்கை கடப்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று (20) மீன்பிடிக்கச் சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (20) காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீனவர்கள் நேற்று நள்ளிரவு இலங்கை தலைமன்னாருக்கும்- நாச்சிகுடா வுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு படகையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.

இதில் ஒரு படகையும் அதிலிருந்து 5 மீனவர்களும் இயந்திர கோளாறு காரணமாக காற்றின் வேகத்தால் எல்லை தாண்டி வந்ததாக மீனவர் தெரிவித்ததையடுத்து படகை சோதனை செய்த இலங்கை கடற்படையினர் இயந்திர கோளாறு உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த படகையும் அதிலிருந்து 5 மீனவர்களையும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பினர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments