உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இன்று ஐ.நா அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
காலிமுகத் திடலில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் தன் எழுச்சி போராட்டம்,இன்று 104 ஆவது நாளை எட்டி இருக்கிறது.
இந்நிலையில் போராட்டம் மேலும் புத்தகத்தோடு முன்னெடுக்கப்படும் என்று போராட்டக்காரர்கள் என்று அறிவித்தார்கள்.
கொழும்பு காலி முகத்திடல் போராட்டம் ஜனாதிபதி செயலகப் பிரதேசங்களில் இருந்து அவர்கள் தற்காலிகமாக வெளியேறினாலும், காலி முகத்திடலில் நிலை கொண்டு தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போராட்ட களத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் போராளிகளுக்கு தொடர்ந்தும் கொலையச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக இவர்கள், தங்களது மகஜரில் தெரிவித்துள்ளார்கள்.
போராளிகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலை தொடர்பாக ஐநா கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாகும்.