எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்னும் சொற்ப நேரத்திலே பதவி ஏற்கின்ற நிலையில், பிரதமர் யார் என்ற கேள்வி இப்பொழுது எழுந்திருக்கிறது.
ரணில் வெற்றி பெற்றால் பிரதமராக தினேஷ் குணவர் தனவே இருப்பார் என்று முன்னர் ஆளுங்கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், பிரதமர் பதவிக்கு விஜயதாச ராஜபக்ஷவின் பெயரும் முன்னொழிய பெற்றிருப்பதாக தெரிய வருகிறது. அதேபோல, சுசில் பிரேம ஜெயந்தின் பெயரும் முன் மொழிய பெற்றிருப்பதாக தெரிய வருகிறது.
இந்த இழுபறி நிலை தொடரும் ஆக இருந்தால், புதிய பிரதமர் யார் என்பது உடனடியாக அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கட்சி வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.