Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபுதிய பிரதமராக நாளை பதவி ஏற்கிறார் தினேஷ்

புதிய பிரதமராக நாளை பதவி ஏற்கிறார் தினேஷ்

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன நாளை பதவி ஏற்க உள்ளார்.
புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு நாளை அலரி மாளிகையில் நடைபெற இருக்கின்ற நிலையில், பிரதமரம் பதவி பிரமாணம் செய்து கொள்வார் என்று உத்தியோக பூர்வ வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

புதிய அமைச்சரவையும் நாளை காலை 9 மணி அளவில் பதவி பிரமாணம் செய்து கொள்ள உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறும்.
பாராளுமன்றத்திலே நடைபெற்ற தேர்தலிலே பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், பிரதமராக தினேஷ் குணவர்த்தனவை நியமிப்பது என்பது ஏற்கனவே அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட உடன்பாடாக தெரிய வருகிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments