ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி பிரமாணம்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அதிகாரப்பூர்வமாக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நடந்த நிகழ்வில், பிரதம நீதி அரசர் ஜெயந்த ஜெயசூரிய முன்னிலையில் இவர் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.