இலங்கை ஜனநாயக சோசியலிச குடியரசின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்னும் சொற்ப வேளையில் உத்தியோபூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
இது தொடர்பான நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.