ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியின் செயல் திட்டங்களுக்கு முழுமையானதும் ஆக்கபூர்வமானதுமான ஒத்துழைப்பு வழங்குவதற்கு பிரதான எதிர்க்கட்சி தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் சந்திப்பு மிகவும் சுமூகமாக நடந்ததாக சஜித் பிரேமதாச தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.