Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஎம்பி பதவியில் இருந்து ரணில் ராஜினாமா

எம்பி பதவியில் இருந்து ரணில் ராஜினாமா

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிய வருகிறது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்பு பாராளுமன்றத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கு அறிவித்துள்ளார்.

அதேநேரம், ரணில் விக்ரமசிங்க, இன்று 21 ஆம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினருக்கான வெற்றிடம் இன்றிலிருந்து ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணை குழு தலைவருக்கு பாராளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்து ஒருவரை நியமிப்பதற்கு கட்சியை தீர்மானித்திருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ருவன் விஜயவர்தன எம்பியாக நியமிக்கப்படலாம் என்று தெரிய வருகிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments