Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபாராளுமன்றில் பலத்த போட்டி:ஆட்சி பீடம் ஏறுவதுரணிலா? டலஸா..?

பாராளுமன்றில் பலத்த போட்டி:
ஆட்சி பீடம் ஏறுவது
ரணிலா? டலஸா..?

- காலை 10 மணிக்கு வாக்கெடுப்பு - தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்

பரபரப்பான அரசியல் சூழலில் புதிய மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து ஜனாதிபதி தேர்தல் இன்று காலை நடைபெற உள்ளது. நாட்டில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் பல்லடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டு இன்று காலை 10 மணிக்கு கூடும் பாராளுமன்றத்தில், இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார்.

அரசியலமைப்பின்படி,இந்தத் தேர்தலில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியாக செயல்படுவார்.
ஜனாதிபதி ஒருவரின் இராஜினாமாவை அடுத்து அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு மூவர் போட்டியிடுகின்றார்கள்.

இப்படியான ஒரு தேர்தலை இலங்கை இதுவரை கண்டதில்லை.
பதில் ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் டலஸ் அழக பெரும, ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகிய மூவருமே இன்றைய தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப் பெருமவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் பிடிப்பதிலும், இறுதி நேர பிரசாரங்களில் ஈடுபட்டு ஆதரவை திரட்டுவதை பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

நேற்று பாராளுமன்றத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்பு தொடங்கிய பிரசாரப் பணிகள் இன்று காலை வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
டலஸ் அழக பெருமைக்கு ஆதரவளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது பெரும்பாலானவர்களின் கணிப்பீடு. அதனை, வியூகங்களை வகுத்து வாக்களிப்பவர்களின் பெரும்பாலானவர்களை தன் வசப்படுத்துவதில் ரணில் விக்கிரமசிங்க மும்முரமாக செயல்பட்டார் என்று தெரிய வருகிறது.

இந்தத் தேர்தலில் டலஸ் அழக பெரும வெற்றி பெறுவாராக இருந்தால், நாட்டுக்கு புதிய தலைமை ஒன்று உருவாகிறது என்று அர்த்தம் கொள்ளலாம். System change – நாட்டு மக்களின் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஓரளவு பதில் கிடைத்ததாக இருக்கும். ஆனால், ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறும் போது நிலைமை சற்று வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடிகிறது.

பாராளுமன்றத்தினுள் மொட்டு கட்சியின் பெரும்பாலான ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க பதவியை பெற்று விட்டாலும், பாராளுமன்றத்துக்கு வெளி யில் அவருக்கு எதிரான அலைகளே தென்படுகின்றன.

ரணில் விக்கிரமசிங்க வை வீடு செல்லுமாறு கோரி போராட்டக்காரர்கள் நேற்று ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்து விட்டனர். அதேபோல, நாடு முழுவதும் ரணிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இன்று இடம் பெறும் என்றும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் நாட்டில் அமைதியின்மையான ஒரு நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

எதுவென்றாலும்,இன்னும் சொற்ப நேரத்திலே, புதிய ஜனாதிபதி யார் என்பது தெரிந்துவிடும்.

நொந்து நொடிந்து போய் கிடக்கின்ற மக்களுக்கு நாட்டில் ஒரு பொருளாதார சுபிட்சம் ஏற்பட வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

225 உறுப்பினர்களின் இன்றைய தெரிவு, நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு வழி வகுக்குமா?

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments