நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட வாவியில் மூழ்கி 17 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த இருவரும் யஹலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் விஷ்வா (வயது 17) மற்றும் மொஹமட் அர்பாத் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.