Monday, 5 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க : அரசியல் வாழ்க்கை வரலாறு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க : அரசியல் வாழ்க்கை வரலாறு

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டார்.

1949 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்க, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமராகப் பதவி வகித்தார்.

1970 ஆம் ஆண்டு களனி தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், பின்னர் பியகம தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1977 ஆம் ஆண்டில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர், ஜே.ஆர். ஜயவர்தன அரசின் அமைச்சரவையில் இளம் அமைச்சராக இருந்ததுடன் இளைஞர் விவகாரம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக அப்போது கடமையாற்றினார். 28 வயதில் வெளிவிவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் இளைஞர் விவகாரம், கல்வி மற்றும் தொழில், விஞ்ஞான மற்றும் தொழிநுட்பம் போன்ற கபினட் அமைச்சு பதவிகளை வகித்தார்.
1989 மார்ச் 06 முதல் 1993 மே 07 வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற சபை முதல்வராக பணியாற்றிய விக்ரமசிங்க, 1994 முதல் 2001 வரை மற்றும் 2004 முதல் 2015 வரை இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்துள்ளார்.

அவர் முதன்முறையாக 1993 மே மாதம் 07 ஆம் திகதி பிரதமராக தெரிவு செய்யப்பட்டதுடன்,1994 ஆகஸ்ட் 19 வரை அந்த பதவியை வகித்தார்.

இவர் இரண்டாவது தடவையாக 2001 டிசம்பர் 09ஆம் திகதி முதல் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 02ஆம் திகதிவரையும், மூன்றாவது தடவையாக 2015 ஜனவரி 09ஆம் திகதி முதல் 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி வரையும், நான்காவது தடவையாக 2015 ஓகஸ்ட் 24ஆம் திகதி முதல் 2018 ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதிவரையும், ஐந்தாவது தடவையாக 2018 டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 21ஆம் திகதி வரையும் பிரதமராகக் கடமையாற்றியிருந்தார்.

இதன் பின்னர்,கடந்த மே மாதம் 09ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க அம்மாதம் 12ஆம் திகதி மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியை வகித்துவரும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அரசியலமைப்புக்கு அமைய கடந்த 14ஆம் திகதி முதல் பதில் ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ரணில் விக்ரமசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
 

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments